பினாங்கு மாநிலத்தில் ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது

ஜார்ஜ் டவுன்: பினாங்கில் உள்ள ஏழு DPA நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கு கூட முழு அமைச்சர் பதவி வழங்கப்படாததால் டி.ஏ.பி தேசிய துணைத் தலைவர் சௌ கோன் இயோவ் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

15ஆவது பொதுத் தேர்தலில் குறைவான நாடாளுமன்ற இருக்கைகளை பெற்ற கட்சிகளின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர் என்றார்.

எங்கள் ஆரம்பக் கண்ணோட்டத்தில், இது (அமைச்சரவை வரிசை) சமநிலையான விநியோகம் அல்ல. நான்கு டிஏபி அமைச்சர்கள் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை குறைவாக உள்ளது.

நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். எவ்வாறாயினும், இது ஒரு ஒற்றுமை அரசாங்கம் என்பதையும், அவர் விரும்பியவரை நியமிக்க பிரதமருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று பினாங்கு டிஏபி தலைவர் பத்து காவானில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானுக்குள், டிஏபி 40 இடங்களையும், பிகேஆர் 31 இடங்களையும், அமானா எட்டு இடங்களையும், உப்கோ இரண்டு இடங்களையும் வென்றது. PH உடன் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்ட மூடா ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

அன்வாரின் அமைச்சரவையில் எட்டு பிகேஆர் அமைச்சர்கள் (பிரதமராக அன்வார் உட்பட), டிஏபியிலிருந்து நான்கு பேர், அமானாவில் இருந்து இருவர் மற்றும் உப்கோவைச் சேர்ந்த ஒருவர் உள்ளனர்.

மற்ற உறுப்பினர்கள் அம்னோ மூலம் 6  பாரிசான் நேஷனலை சேர்ந்தவர்கள். PBB, PRS மற்றும் PDP மூலம் கபுங்கன் பார்ட்டி சரவாக்கிலிருந்து ஐந்து; மற்றும் ஒன்று கபுங்கன் ரக்யாட் சபாவிலிருந்து சபா பெர்சத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சமய விவகார  அமைச்சரான நயிம் மொக்தார் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லாதவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here