வரும் நவ.20ஆம் தேதி மலாக்கா மாநில தேர்தல்

மாநிலத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 8 ஆம் தேதியும், வாக்களிப்பு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (அக்டோபர் 18) செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அப்துல் கனி சல்லேவும் நவம்பர் 16 ஆம் தேதி ஆரம்ப வாக்குப்பதிவு நடைபெறும் என்று கூறினார்.

அக்டோபர் 4 ஆம் தேதி பாரிசன் நேஷனல்/பெரிகாத்தான் நேஷனல் தலைமையிலான மாநில அரசுக்கான ஆதரவை நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெற்ற பிறகு, மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்கிறது.

அக்டோபர் 5 ஆம் தேதி சட்டசபையை கலைக்க யாங் டி-பெர்டுவா நெகிரி துன் டாக்டர் முகமட் அலி முகமட் ருஸ்தாம் ஒப்புக்கொண்டதை  மலாக்கா  மாநில சபாநாயகர் டத்தோஸ்ரீ அப் ரவுப் யூசோஃப் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here