சபாவின் கடலில் அமலிலுள்ள ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கோத்தா கினாபாலு, டிசம்பர் 6 :

இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) முடிவடைவதாக இருந்த சபாவின் கடல் ஊரடங்கு உத்தரவு, மேலும் 14 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் சட்டம் 1967 இன் பிரிவு 31(4) இன் கீழ் 200 வது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு சட்டம் முதலில் ஜூலை 16, 2014 அன்று அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும், அத்தோடு வெளியாட்கள் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டாகான், பெலூரான், கினாபாடாங்கான், லஹாட் டத்து, குனாக், செம்போர்னா மற்றும் தாவாவ் ஆகிய இடங்களில் இருந்து மூன்று கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கடல் ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் என்று சபா காவல்துறை தலைவர், ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here