சுங்கச்சாவடியில் லோரி மோதி ஓட்டுனருக்கு படுகாயம்

கோலாலம்பூர், டிச 7 ஆம் தேதி பூச்சோங் ஆயர் ஈத்தாம் சுங்கச்சாவடியில் லோரி மோதி       விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 வயதுடைய லோரி ஓட்டுனர் கடுமையாக காயம் அடைந்தார்.

நேற்று  பிற்பகல்  2.52 மணி  அளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குனர் Norazam Khamis தெரிவித்தார். அந்த விபத்தின்போது  ஓட்டுனர்   லோரியின் அடியில்  சிக்கிக் காயமடைந்தார். அவரது இடது கை மற்றும் இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சைபர்ஜெயா தீயணைப்பு நிலையத்தைத் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.  தீயணைப்பு வீரர்கள்   சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி ஓட்டுனரை லோரியிலிருந்து வெளியே மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here