ரோஸ்மா அம்னோ தலைமையகத்தில் காணப்பட்டார்

கோலாலம்பூர்: வியாழன் (டிசம்பர் 8) இரவு 8 மணிக்கு சற்று முன்னர் இங்குள்ள மெனாரா டத்தோ ஆன் கட்டடத்திற்கு டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் வந்ததைக் கண்டு ஊடகவியலாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி ஒரு பெண் உதவியாளருடன் வந்திருந்தார். சுற்றிவளைக்கப்பட்ட லிப்ட் பகுதிக்கு விறுவிறுப்பாக நடந்து சென்ற அவர், தனது புகைப்படத்தை எடுக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் கூறியது கேட்டது.

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் (GE15) பிறகு முதன்முறையாக அம்னோ தலைமையகத்தில் அவர் ஏன் வந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here