38,729 புதிய வாக்காளர்களின் பெயர்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர்:

மார்ச் 2024 நிலவரப்படி, துணை வாக்காளர் பட்டியலில் (DPT BLN3/2024) புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்தம் 38,729 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது.

குறித்த பெயர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், ஏதாவது மாற்றங்கள் இருப்பின் எதிர்வரும் மே 29 வரை மக்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கலாம் என்று, தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இந்தேரா இக்மல்ருடின் இஷாக் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எனவே மேற்கூறப்பட்ட பட்டியியலில் உள்ளவர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் DPT BLN3/2024 யிலுள்ள பெயர்கள் மற்றும் எந்தவொரு ஆட்சேபனையும் ஐந்து முறைகள் மூலம் செய்யப்படலாம், இதில் EC போர்ட்டலில் உள்நுழைவது உட்பட, https://www.spr.gov.my அல்லது https://mysprsemak.spr.gov.my ; http://ppn.spr.gov.my என்ற இணைப்பில் உள்ள மாநில தேர்தல் அலுவலகங்களின் அதிகாரப்பூர்வ போர்டலலை அணுகலாம், https://myspr.spr.gov.my என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவோ; மற்றும் வாக்காளர் பதிவு சரிபார்ப்பு ஹாட்லைன் எண் 03-8892 7218 மூலமாகவோ குடிமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அது கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here