பேராக் மற்றும் கெடாவில் சாலைத் திட்டங்கள் தொடர்பாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆறு பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து பாலிங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் வெள்ளிக்கிழமை (டிச. 9) விடுவிக்கப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி, ஒன்பது குற்றச்சாட்டுகளின் பேரில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் மூலம் அப்துல் அஜீஸுக்கு விடுதலை (டிஎன்ஏஏ) மறுக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 254 (3) பிரிவின் கீழ் அப்துல் அஜீஸை விடுவிக்க கூடாது என அரசு வழக்கறிஞர் அஸ்லிந்தா அஹாட் நீதிமன்றத்திடம் கோரியதை அடுத்து, மேலதிக விசாரணை தேவை என்ற அடிப்படையில் நீதிபதி அஸுரா அல்வி மறுப்பு தெரிவித்திருந்தார்.
உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் அசார் அப்துல் ஹமீத், வழக்கறிஞர் அமர் ஹம்சா அர்ஷாத் தனது கட்சிக்காரரை உடனடியாக விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த நோட்டீஸை அனுமதித்து அப்துல் அஜீஸை விடுவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லாததால், விண்ணப்பதாரர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அசார் கூறினார்.
முன்னதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), அக்டோபர் 26 தேதியிட்ட கடிதம் மூலம், ஆணையம் தனது விசாரணையை முடித்துவிட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களும் அப்துல் அஜீஸிடம் திருப்பித் தரப்பட்டதாகவும் தெரிவித்ததாக அமர் ஹம்சா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
55 வயதான அப்துல் அஜீஸ் மீது 5.2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மூன்று குற்றச்சாட்டுகள் மேலும் பேராக் மற்றும் கெடாவில் உள்ள சாலைத் திட்டங்கள் தொடர்பாக RM972,414.60 பணமோசடி செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
Kamaludin Md Said, Abu Bakar Jais and Che Mohd Ruzima Ghazali ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு, ஒன்பது குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது