வங்கதேச சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 மலேசியர்களுக்கு உதவுமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

நாட்டிற்குள் தங்கம் கடத்தியதாக வங்கதேச சிறையில் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மூன்று மலேசியர்களுக்கு உதவ விஸ்மா புத்ராவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வான் சாலிஹின், ஜோஹாரி ஹருன் மற்றும் ஹீ வூல் கோங் ஆகிய மூவரும் வங்கதேச அதிகாரிகளால் அக்டோபர் 2015 இல் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பு (MHO) புத்ராஜெயா அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது என்று கூறி மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியது.

MHO பொதுச்செயலாளர் ஹிஷாமுதீன் ஹாஷிம், இதேபோன்ற குற்றத்தைச் செய்த பல சீனப் பிரஜைகள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்றார்.

இதே குற்றத்தைச் செய்த வங்காளதேசிகளும் இருந்தனர். ஆனால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். அப்படியென்றால் (மூன்று மலேசியர்களுக்கு) ஏன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பதுதான் கேள்வி.

நாங்கள் வங்காளதேச சட்ட அமைப்பை கேள்வி கேட்கவோ அல்லது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. ஆனால் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

சமீபத்தில்  அஸ்வானின் தாயார், சித்தி பாத்திமா ஹனாஃபி, தனது மகனுக்கு அவரது குற்றத்திற்கு இலகுவான தண்டனை வழங்குவதற்காக MHO இன் உதவியை நாடினார். அப்போது அஸ்வானுக்கு வயது 21 தான் என்றும், அவர் நாட்டுக்கு எடுத்துச் சென்ற பொருள் தங்கம் என்பது அவருக்குத் தெரியாது என்றும் கூறினார்.

69 வயதான அஸ்வானின் தாயார் தன் மகன் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறையில் வாடுவதாகவும், இறுதியில் தனது மகன் கம்பிகளுக்குப் பின்னால் இறந்துவிடுவார் என்று கற்பனை செய்வது தனது இதயத்தை உடைத்ததாகவும் கூறினார்.

மூன்று மலேசியர்களின் தண்டனைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு குறைக்கப்படும் வகையில் அரசாங்கம் தலையிட்டு அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஹிஷாமுதீன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here