ஸ்பெயினில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா ரெயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரெயிலுடன் இந்த ரெயில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் அளவுக்கு யாரும் பெரிய காயம் ஏற்படவில்லை.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுப்பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here