பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான நிலையங்கள் பணிநேரம் நீட்டிப்பு: லோக்

நாட்டின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAM)   விமான நிலைய இயக்க நேரத்தை நீட்டிப்பதால், பண்டிகை காலங்களில் அதிக          எண்ணிக்கையிலான  விமானங்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறினார்.

இந்த நடவடிக்கையானது தீபகற்பம், சபா மற்றும் சரவாக் இடையே முக்கிய பண்டிகை காலங்களில்  விலை உயர்வு பிரச்சினையையும் தீர்க்கும் என்றார்.  சீனப் புத்தாண்டுக்கு முன்னும்  அடுத்த ஆண்டு மற்ற பண்டிகைக் காலங்களில் அனைத்து விமான நிலைய இயக்க நேரங்களையும் நீட்டிக்க CAAM உறுதிபூண்டுள்ளது.

விமான நிலைய இயக்க நேரத்தை நீட்டிப்பதன் மூலம், விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் எண்ணிக்கையை, குறிப்பாக இரவு நேர விமானங்களை அதிகரிக்க முடியும்  என்று அவர் கூறினார்.  கடந்த மாதம் சரவாக்கின் சிபுவில் தனது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விமான நிறுவனங்கள் மற்றும் அரசு இணைந்து செயல்பட்டால் மட்டுமே      சபா மற்றும் சரவாக்கிற்கான விமானக் கட்டணங்களைக்  குறைப்பதற்கான   நடவடிக்கைகளை செய்ய முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here