கடற்கரை மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க பொது மக்களுக்கு வலியுறுத்தல்

மழைக்காலத்தில் அபாயகரமான அலைகள் மற்றும் நீர் எழுச்சி காரணமாக கடற்கரைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்ட போதிலும், சில சுற்றுலாப் பயணிகள் தங்கள் ஆண்டு இறுதி விடுமுறை திட்டங்களைத் தொடர்வதில்   உறுதியாக உள்ளனர்.

25 வயதான மார்க்கெட்டிங் நிர்வாக அதிகாரி Evon Khong, தனது சுற்றுலாத் திட்டங்கள் கைவிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலைப்படவில்லை என்றார்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் மலிவான விலையில் விமான டிக்கெட்டை வாங்கியதாக  அவர் கூறினார்.

27 வயதான Norsyafika Zainal, செலாயாங்கிற்கு அருகிலுள்ள காஞ்சிங் நீர்வீழ்ச்சிக்கு தனது குழந்தைகளின்  பள்ளி ஆண்டு இறுதி விடுமுறையை  கொன்டாட விரும்புவதாகவும், ஆனால் வானிலை குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறினார்

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட், விடுமுறையில் செல்பவர்கள் தங்கள்  பாதுகாப்பிற்காக நீர்முனைப் பகுதிகளுக்குச் செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  நவம்பரில் பருவமழை முழு வீச்சில் பொழிந்ததைத்  தொடர்ந்து, நாடு முழுவதிலும் இருந்து   கடற்கரைகள் மற்றும் ஆறுகளில் மூழ்கும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

வெள்ளம் மற்றும் கொந்தளிப்பான நீரின் ஆபத்து இன்னும் அதிகமாக இருப்பதால், கடற்கரைகள் போன்ற எந்த நீர்முனைப் பகுதிக்கும் செல்ல இது சரியான நேரம் அல்ல.  நீங்கள் தண்ணீருக்குள் நுழையாவிட்டாலும், ஒரு வலுவான திடீர் அலை  எழும்பும் போது  அருகில் பாதுகாப்புக்கு யாரும்  இல்லாத நிலையில்   நீரில்   அடித்து செல்ல வாய்ப்புள்ளது.

நோர் ஹிஷாம் அவர்கள் விடுமுறைக்காக நீர்முனைப் பகுதிகளுக்குச் செல்வதை திட்டமிடுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். வானிலை மாற்றங்களால்  அதிகம் பாதிக்கப்படக்கூடிய பெரும்பாலான நீர்முனைப் பகுதிகளில் மக்களை எச்சரிப்பதற்காக   சிவப்புக் கொடிகளை வைத்துள்ளோம்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here