மூன்றாம் தர பராமரிப்பு குறித்து பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கு கண்டனம்

நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை பராமரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளில் தவறிவிட்டதாக போக்குவரத்து ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.

தனியார் வாகனங்களின் பயன்பாட்டை தவிர்த்து , பேருந்து மற்றும் ரயில் சேவைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவான கொள்கையை அரசாங்கம் கொண்டிருந்தாலும், பொதுப் போக்குவரத்து அமைப்புகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக ரோஸ்லி ஆசாத் கான் கூறினார்.

பொதுப் போக்குவரத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை  நிர்வகிக்கவும் பராமரிக்கவும் தொழில்நுட்ப ரீதியாக தகுதியற்ற நபர்களின்  குழுவை பணியமர்த்தியிருப்பதாக சாடினார்.   நாட்டின்  பொது போக்குவரத்து      முதல் தர வசதிகளை கொண்டுள்ளது. ஆனால் அவற்றின் பராமரிப்பு “மூன்றாம் தரமானது ” என்று நேற்று கூறினார். அண்மையில் கிள்ளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் ஏற்பட்ட பல இடையூறுகள் குறித்து இவ்வாறு கூறியிருந்தார்.

பேருந்து மற்றும் இரயில் சேவைகளை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக சிறந்த தொழில்நுட்பத்தில் அரசாங்கம் முதலீடு செய்வதோடு, பொது போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்காக அதிக அளவிலான தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரோஸ்லி கூறினார்.

மற்றொரு போக்குவரத்து ஆலோசகர், Goh Bok Yen, பொதுப் போக்குவரத்து அமைப்புகளைப் பராமரிப்பதற்கு, தொழில்நுட்ப, அறிவார்ந்த, திறமையான பொறியாளர்கள் மற்றும்  வல்லுநர்கள் தேவை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here