கோல்டன் குளோப் விருதுகள் 2023 பட்டியலில் ராஜமௌலியின் `RRR’

80 ஆவது கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைப்  பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ராஜமௌலியின் ‘RRR’ திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   2023 ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச அளவிலான 80ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.

சர்வதேச அளவில் நடைபெறும் இந்த விருது விழாவுக்கு ஏராளமான திரைப்படங்கள் விருதுகளுக்காகப் பல பிரிவுகளில் விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில் தற்போது ‘கோல்டன் குளோப்’ விருதுகளுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிக்கான ‘சிறந்த திரைப்படம்’ என்னும் பிரிவில் ராஜமௌலியின் ‘RRR’ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘சிறந்த பாடல்’ பிரிவில் ‘RRR’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜமொளலி தனது டுவிட்டர் பக்கத்தில், கோல்டன் குளோப் விருதுகளுக்காக இரண்டு பிரிவுகளில் ‘RRR’ திரைப்படத்தைப் பரிந்துரைத்ததற்காக  தேர்வுக் குழுவிற்கு நன்றி எனவும்  ‘RRR’ படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here