காதல் மோசடியில் சிக்கி பெண்மணி RM150,000க்கு மேல் இழந்தார்

கோப்பு படம்

காதல் மோசடியில் சிக்கி 44 வயது பெண் ஒருவர் RM150,000 க்கு மேல் இழந்ததாக சிபு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் சுல்கிப்ளி சுஹைலி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் நட்பாகப் பழகிய ஒருவரிடம் பணத்தைத் தொலைத்துவிட்டதாகக் கூறி, நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து போலீசாருக்கு புகார் கிடைத்தது என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் இந்தாண்டு செப்டம்பரில் பேஸ்புக்கில் ஒரு நபருடன் பழகினார். அவர் அக்டோபர் 8 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார்.

“ஒரு பெரிய தொகை பிரிட்டிஷ் பவுண்டுகளை தான் கொண்டு வந்ததற்காக KLIA இல் குடிநுழைவுத் துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் அவர் குறித்த பெண்ணிடம் கூறினார். சந்தேக நபர் தன்னை குடிநுழைவுத் துறையிலிருந்து விடுவிக்க அந்தப் பெண்ணிடம் உதவி கேட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அந்தப்பெண் சந்தேக நபரின் கதையை நம்பி, அவனிடம் அனுதாபம் காட்டியதால், அக். 10 முதல் டிசம்பர் 5 வரை சந்தேக நபரால் வழங்கப்பட்ட இரண்டு வங்கிக் கணக்குக்கு மொத்தம் RM152,050 பணத்தை பரிமாற்றம் செய்ததாக ஏசிபி சுல்கிப்லி மேலும் கூறினார்.

“பின்னர், அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்த அவர் போலீசில் புகாரளித்தார்” என்று அவர் கூறினார்.

சமூக வலைதளங்களில் சந்திக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here