பகாங்கில் 6 ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளது

இன்று காலை 8 மணி நிலவரப்படி, பகாங்கில் உள்ள ஆறு ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளதாக, நீர்ப்பாசன மற்றும் வடிகால் திணைக்களம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ட்ரையாங்கில் உள்ள சுங்கை ட்ரையாங்; லுபுக் பாகு, மாரானிலுள்ள பேரா மற்றும் சுங்கை பஹாங், பலோ ஹினாயில் உள்ள சுங்கை பஹாங், பெக்கான்; ஸ்ரீ டாமாயில் சுங்கை பெலட், ; ஜாலான் கோத்தா பஹாகியாவில் சுங்கை கெராடோங், கம்போங் சுபுஹ், மாரானிலுள்ள ரொம்பின் மற்றும் சுங்கை லூயிட் என்பன அடங்கும்.

இதற்கிடையில், வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெக்கான் மற்றும் ரொம்பின் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குவாந்தான் மற்றும் பெராவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் எதிர்வுகூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here