5ஜி நெட்வொர்க் செயல்பாட்டை அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும்: ஃபஹ்மி

நாட்டில் 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவை  விரைவில் முடிவு செய்யும் என்று ஃபஹ்மி ஃபட்சில்  கூறுகிறார்.  Digital Nasional Bhd (DNB)  5ஜி நெட்வொர்க் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க தனது அமைச்சகமும் நிதி அமைச்சகமும் திங்கள்கிழமை (டிசம்பர் 12) ஒரு கூட்டத்தை நடத்தியதாக தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல்   துறை  அமைச்சர்  கூறினார்.

இந்த விவகாரம் தாமதப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  என அனைவருக்கும் உடனடியாக 5G  சேவையை வழங்க வேண்டும். வணிக நடவடிக்கைகளை   அதிகரிக்க இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தலாம்  என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13)  பேட்டியின் போது கூறினார்.

6G நெட்வொர்க்கைத் தொடங்குவதற்கு முன் 5G பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும், 5G தொழில்நுட்பத்தை உருவாக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான special purpose vehicle (SPV)  DNB  2024 ஆம் ஆண்டுக்குள் 80 சதவீத குடியிருப்புப் பகுதிகளில் 5G கவரேஜை செயல்படுத்துவத உறுதிபூண்டுள்ளது   என்றும் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.  நாட்டு மக்கள்  வெறும் பேச்சில்  கவனம் செலுத்தும் தலைவர்களை விரும்புவதில்லை,  மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்ட ஒரு அரசாங்கத்தை விரும்புகிறார்கள் என்று  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here