வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்துமாறு மலேசிய தூதர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

வெளிநாட்டு முதலீடுகளை மீண்டும் மலேசியாவிற்கு ஈர்க்கும் முயற்சிகளில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளுக்கான மலேசிய தூதர்கள் புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மலேசிய தூதர்களுடனான மரியாதை நிமிர்த்தமான ஒரு சந்திப்பு புத்ராஜெயாவில் நடந்ததாக, இன்று வியாழன் (டிசம்பர் 15) தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் பிரதமர் கூறினார்.

” வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் நாட்டின் பெயரை உயர்த்தும் முகமாக ஆக்கப்பூர்வமாக தமது பணிகளையாற்றுவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக டிசம்பர் 2 அன்று, வெளிநாடுகளுக்கான 11 புதிய மலேசிய தூதர்களுக்கான நியமனக் கடிதங்களை மேன்மை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லாஹ் ஷா வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here