2023இல் நாட்டின் GDP 5% அளவு குறையும்

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி 2022ல் மதிப்பிடப்பட்ட 8.2 சதவீதத்திலிருந்து 2023இல் 4-5 சதவீதமாக குறையும் என்று ரேம் ரேட்டிங்ஸ்    (RAM Ratings)  கணித்துள்ளது.

உலகப் பொருளாதார மந்தநிலை மலேசியாவின் ஏற்றுமதியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விலை ஏற்றங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக  உள்நாட்டு நுகர்வு பாதிக்கப்படலாம் என்று மதிப்பீட்டு நிறுவனம் கூறியது.  2022 ஆம் ஆண்டில் சராசரி வேலையின்மை விகிதம் 3.8% இல் இருந்து 3.5% ஆக குறைந்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு கூடுதல் உத்வேகத்தை அளிக்க உதவும்.  2022 இல் மதிப்பிடப்பட்ட 5.8% இல் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% க்கு குறைந்து நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மதிப்பீடு இன்னும் பெட்ரோல் மற்றும் மின்சார கட்டணங்கள் உட்பட முக்கிய பொருட்களுக்கான மானியத்   திட்டங்களுக்கு  உட்பட்டது என்று  கூறப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் அரசாங்கக் கடன் RM1.1 டிரில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62.4% ஆக இருக்கும் என்றும், 2023 ஆம் ஆண்டிற்கான   16.9%  உத்தேச வருவாயில்  கடன் சேவைகள் 15.1% ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here