பத்தாங்காலி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜோகூர் சுல்தான் இரங்கல் தெரிவிப்பு

இன்று அதிகாலை சிலாங்கூரின் பத்தாங்காலி நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“இந்த செய்தியைக் கேட்டு தான் மிகவும் வருத்தமடைந்தாகவும், முகாம் தளத்தில் ஏற்பட்ட இந்த கடினமான நேரத்தை கடக்க பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மனவலிமையுடன் இருக்க, எங்கள் அனைவரது பிரார்த்தனையும் அவர்களுக்கு என்றும் துணையாக இருக்கும்” என்று ஜோகூர் சுல்தானின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) பதிவிடப்பட்ட ஒரு பதிவில் கூறினார்.

நண்பகல் 1 மணி நிலவரப்படி, 61 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 16 பேர் சம்பவத்தில் உயிரிழந்தனர் மேலும் 17 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.