புத்ராஜெயா: ஜூன் 30 ஆம் தேதி அதிகபட்ச சில்லறை விலை திட்டம் முடிவடைவதைத் தொடர்ந்து கோழியின் விலை அடுத்த மாதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நான்டா லிங்கி கூறுகிறார்.
கோழி இறைச்சியின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் (MOF) தேவைப்படுபவர்களுக்கு உதவி வழங்க திட்டமிட்டுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்று நந்தா கூறினார்.
வியாழனன்று (ஜூன் 16) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் (KPDNHEP) மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு, “தேவைப்படுபவர்களுக்கு உதவ MOF ஏதாவது செய்யும்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அரசாங்கம் நிலையான கோழியின் அதிகபட்ச சில்லறை விலையாக ஒரு கிலோவிற்கு RM8.90 ஆகவும், சூப்பர் சிக்கன் (கால்கள், தலை, கல்லீரல் இல்லாமல் அறுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும்) ஒரு கிலோவிற்கு RM9.90 ஆகவும் நிர்ணயிக்கிறது. இதற்கிடையில், கோழியின் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதன் மூலம் அதனை லாபமாகி கொள்ள வேண்டாம் என்று தொழில்துறையினருக்கு நந்தா நினைவூட்டினார்.
KPDNHEP விலை அம்சத்தையும் கண்காணிக்கும் என்றும் தேவைப்பட்டால், தவறான வர்த்தகர்களுக்கு எதிராக, விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாபத் தடைச் சட்டம் (AKHAP) 2011 இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
தொழில்துறையினர் சாதகமாகப் பயன்படுத்தி விலையை அதிகமாக உயர்த்த மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். செயல்பாட்டுச் செலவு அதிகரித்துள்ளதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், அது நியாயமான முறையில் செய்யப்பட்டால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று அவர் கூறினார்.









