பத்தாங் காலி நிலச்சரிவு : இதுவரை கண்டுபிடிக்கப்படாத 12 பேரில் எண்மர் மலாக்காவைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது

ஜாலான் பத்தாங் காலி-கெந்திங் ஹைலேண்ட்ஸ் இல் உள்ள Fathers’ Organic பண்ணை முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தேடப்பட்டுவரும் 12 பேரில், கம்போங் மச்சாப் பாரு, அலோர் காஜாவைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் எட்டு பேர் அடங்குவதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரது இளைய சகோதரரான Tai Yi Wei, 27, கூறுகையில், அவரது சகோதரர், Tai Chang Lin, 35, மற்றும் அண்ணி Yu Siew Pay, 34, முகாம் பகுதிக்கு கடந்த புதன்கிழமை விடுமுறைக்கு சென்றதால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.

அவரது அண்ணன், அண்ணியுடன் நான்கு மற்றும் ஏழு வயதுடைய அவர்களின் இரண்டு குழந்தைகளை அழைத்துச் சென்றனர் என்றும், அவர்களுடன் நான்கு பேர் கொண்ட தனது அண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரது குடும்பமும் சென்றதாகவும் அவர் கூறினார்.

“இதற்கு முன், எனது அண்ணனின் நண்பர் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவர் முகாமுக்கு பாதுகாப்பாக வந்துவிட்டார் என்று கூறினார்.

“சம்பவம் நடந்த பிறகு, நான் அவர்களை மீண்டும் மீண்டும் அழைக்க முயற்சித்தேன், அவர்களது கைத்தொலைபேசிக்கு அழைப்பு செல்கிறது, ஆனால் பதில் அளிக்கவில்லை என்றார்.

“நிலச்சரிவில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக கூறும் ஒரு அழைப்பை மட்டுமே அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இன்று நண்பகல் 12:15 மணி வரை, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மீதமுள்ள 12 பேரை தேடல் மற்றும் மீட்புக் குழு (SAR) கண்டுபிடிக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவ்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here