நெகிரி செம்பிலானில் உள்ள ஜாலான் புக்கிட் மிகுவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் வைரலான வீடியோ கிளிப் உண்மை செய்தி இல்லை என்று பொதுபணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி இன்று நிராகரித்துள்ளார்.
FT 009 பிரிவு 7.3 Jalan Tampin-Kuala Pilah-Manchis பாதையில் சரிவு நடந்த ஒரு சம்பவத்தின் பழைய வீடியோ இது என்று அவர் கூறினார். நந்தாவின் கூற்றுப்படி, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காகவும், முழுமையான விசாரணையை மேற்கொள்ளவும் டிசம்பர் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சாலையை போக்குவரத்துக்கு மூடுவதற்கு பொதுபணிகள் துறை விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.
தம்பின் அல்லது கோல பிலாவுக்குச் செல்பவர்களுக்கு Jalan Ulu Keru-Air Mawang, என்ற மாற்றுப் பாதை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தனது முகநூல் கணக்கில் தெரிவித்துள்ளார். ஜனவரியில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்றும், சாலை பயனீட்டாளர்களின் அக்கறைக்கு நன்றி தெரிவித்தார்.








