பத்தாங் காலி நிலச்சரிவு: தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ தன்னார்வலர்களுக்கு அனுமதி இல்லை – காவல்துறை தலைவர்

பத்தாங் காலியின் Father’s Organic Farm பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்படும் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் தன்னார்வலர்கள் உதவ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல்துறை தலைவர், டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமையில் நடைபெறுவதாகவும், யார் இதில் ஈடுபடலாம் என்பதை தீர்மானிக்கும் முடிவு அவர்களுக்கே உண்டு என்றும் அவர் கூறினார்.

” தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், அப்பகுதி பெரியதாகவும், பல குழப்பங்களுக்கு வழி வகுக்கலாம் என்பதாலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள் உள்ளே வந்து உதவுவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை” என்றாரவர்.

” தற்போது தடால் மற்றும் மீட்பு செயற்பாடுகள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் SAR இல் எந்த நிறுவனங்கள் சேரலாம் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள்” என்று, அவர் நேற்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here