புவாட் சர்காஷி பொய்யுரைக்கிறார்; NRC தலைவராக ஒரு சல்லி காசு கூட எடுக்கவில்லை என்கிறார் முஹிடின்

 தேசிய மீட்புக் குழுவின் (NRC) தலைவராக இருந்தபோது பணம் ஏதும் பெறவில்லை என்று பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார். NRCயின் தலைவராக இருந்த முஹிடின், தனது வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்று, 15வது பொதுத் தேர்தலுக்கு முன் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

நான் NRCயை வழிநடத்தியபோதும், நான் அதைச் செய்தேன், ஒரு சல்லி காசு கூட கொடுப்பனவாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்த நிதி ஒதுக்கீட்டையும் பெறவில்லை. முன்னதாக NRC தலைவராக முஹிடின் பல நூறு மில்லியன் ரிங்கிட்களைப் பெற்றதாகக் கூறிய அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் டத்தோ முகமட் புவாட் சர்காஷியின் குற்றச்சாட்டுகளை மறுத்த முகிடின் அத்தகைய கூற்றுக்கள் “பொய்” என்றார்.

(அதிகாரிகள்) நூற்றுக்கணக்கான மில்லியன்கள் (கணக்கில்) உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். நான் லட்சக்கணக்கில் பணம் பெற்றதற்கான ஆதாரம் எங்கே? (இவை) அனைத்தும் பொய். ஒதுக்கீட்டில் (அரசாங்கத்திடமிருந்து) எனக்கு ஒரு சென் கூட கிடைக்கவில்லை என்று முஹிடின் கூறியதாக என்எஸ்டி செய்தி வெளியிட்டிருந்தது.

வெள்ளியன்று, புவாட் ஒரு முகநூல் பதிவில், அவர் NRCதலைவராக இருந்தபோது, பிரதமரின் ஒதுக்கீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த நிதி எதற்காகச் செலவிடப்பட்டது என்று கேள்வி எழுப்பி, முஹிடின் விளக்குமாறு வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here