திரெங்கானுவில் வெள்ள நிலைமை மோசமடைந்தது; 11,415 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

திரெங்கானுவில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, இன்று காலை 8 மணி நிலவரப்படி 3,326 குடும்பங்களைச் சேர்ந்த 11,415 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது நேற்றிரவு 10 மணி நிலவரப்படி, 1,627 குடும்பங்களைச் சேர்ந்த 5,494 பேராக இருந்தது என்று திரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அங்குள்ள ஏழு மாவட்டங்களில் இயங்கிவந்த 103 ஆக இருந்த தற்காலிக நிவாரண மையங்கள் இன்று 174 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், உலு தெரெங்கானு மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளத. அங்கு நேற்றிரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட1,276 குடும்பங்களைச் சேர்ந்த 3,998 பேர் 45 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், இதற்கு முன்பு அங்கு 34 பிபிஎஸ்ஸில் 732 குடும்பங்களில் இருந்து 2,207 தங்கியிருந்தனர்.

“அதேபோல் பெசூட்டில்,​​1,040 குடும்பங்களைச் சேர்ந்த 3,765 பேர் அங்குள்ள 65 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், மூன்றாவது இடமாக செத்தியூ மாவட்டத்தில், ​​இன்று காலை 38 நிவாரண மையங்களில் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2,157 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here