நிலச்சரிவில் இறந்த பெண் மற்றும் குழந்தையை கண்டு கண்ணீர் சிந்திய தீயணைப்பு வீ ரர்கள்

பத்தாங்காலி பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் போது மண் குவியலுக்கு அடியில் புதைந்திருந்த மூன்று வயது குழந்தை மற்றும் தாயின் உடலை தீயணைப்பு வீர்ர்கள் மீட்டுள்ளனர். அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த நிலையில் இறந்திருப்பதை கண்ட அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

மூத்த தீயணைப்பு அதிகாரி ஷஹாரி ஷம்சுதீன்  கூறுகையில்,  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் தனது 23 ஆண்டுகால சேவையின் மிகவும் துயர அனுபவங்களில் ஒன்றாகும்  இது என்றார். காலை 10 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், மேலும் 30 பேருடன் சிவப்பு மண்டலத்தில் இறந்தவர்களின் உடல்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், தேடும் பணியின் போது உடல்கள் சேதமடைவதைத் தடுக்க, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் குழு மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருந்தது என்றார். நிச்சயமற்ற வானிலை மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும், சில சமயங்களில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மீது நிற்கிறோம் என்பதை நாங்கள் உணரவில்லை என்று 17 ஆண்டுகளாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பணியாற்றிய Mohd Shaiful Nizam கூறினார்.

பத்தாங்காலியில் உள்ள  ஆர்கானிக் பண்ணை முகாமில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேரைக் காணவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here