மக்களவையின் புதிய சபாநாயகராக டான்ஸ்ரீ அஹார் அஜிசான் ஹாருனுக்குப் பதிலாக, முன்னாள் குரூண் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹாரி அப்துல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்த ஜோஹாரி, எதிர்கட்சியின் வேட்பாளரான முன்னாள் உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகமட் ராட்ஸி ஷேக் அகமதுவுக்கு எதிராக 147 வாக்குகளைப் பெற்றார். அவர் 74 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
15ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானதை அடுத்து புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஜோஹாரி மற்றும் முகமது ரட்ஸிக்கான எழுத்துபூர்வ வேட்புமனுக்களை டிசம்பர் 5 ஆம் தேதி பெற்றதாக மக்களவை செயலாளர் நிஜாம் மைடின் பச்சா மைடின் தெரிவித்தார்.
ஜூலை 13, 2020 முதல் சபாநாயகர் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக பதவி வகித்த பின்னர் டிசம்பர் 18 அன்று அஹார் சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.