மோசமான வெள்ளம்: திரெங்கானு மற்றும் கிளாந்தானை இணைக்கும் ஆறு சாலைகள் மூடப்பட்டன

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக திரெங்கானுவையும் கிளந்தானையும் இணைக்கும் செத்தியூ மாவட்டத்தில் உள்ள ஆறு சாலைகள் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.

கம்போங் பாலேக் புக்கிட்டிற்கு உள்ள பெர்ட்ரோனாஸ் பெர்மைசூரிக்கு அருகில் உள்ள ஜாலான் கோலத் திரெங்கானு-கோத்தா பாரு, குந்தாங் சமிக்ஞை விளக்கில் உள்ள ஜாலான் கோலத் திரெங்கானு-கோத்தா பாரு மற்றும் கம்போங் குந்தாங் டாலாமில் உள்ள ஜாலான் குந்தாங்-கம்போங் சௌஜானா ஆகிய சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, கம்போங் பூலோவில் உள்ள ஜாலான் கோலத் திரெங்கானு-கோத்தா பாரு, கம்போங் பெசுடிற்கு அருகில் உள்ள ஜாலான் பெர்மைசூரி-கம்போங் உலு செலாடாங் மற்றும் ஜாலான் பந்தாய், சே செலாமா சுற்று வட்டச் சாலைக்கு அருகில் உள்ள ஜாலான் கோலத் திரெங்கானு-கம்போங் ராஜா ஆகிய சாலைகளும் மூடப்பட்டிருப்பதாக, திரெங்கானு போலீசார் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.

இதனிடையே, கோலத் திரெங்கானுவிலிருந்து குவாந்தான் மற்றும் கோலாலம்பூருக்குச் செல்ல விரும்புவோர், கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2-டை (LPT 2) வழக்கம்போல் பயன்படுத்தலாம் என்று அந்நெடுஞ்சாலை நிறுவனம் இன்று முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here