ரந்தாவ் பாஞ்சாங்கில் ஒரு வயது குழந்தை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக, ரந்தாவ் பாஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் சாபவி ஸ்தாப தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு அழைப்பு கிடைத்ததாகவும் மீட்பு நடவடிக்கை பிற்பகல் 1.04 மணி அளவில் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அப்பகுதி மக்கள் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்ததாகவும், மேலதிக நடவடிக்கைக்காக சடலம் பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக சாபவி ஸ்தாப குறிப்பிட்டார்.