சீனாவில் கொரோனா பாதிப்பு: உலக அளவில் மீண்டும் ஒரு எச்சரிக்கை

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கொரோனா தொற்று தொடர்புடைய உயிரிழப்புகளும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியானது.  BF 7 எனப்படும் இந்த வைரஸ் மற்ற இடங்களில் பரவுவதை விட சீனாவில் வேகமாகப் பரவுகிறது.  தற்போது நாடு முழுவதும் பரவி வரும் ஒமைக்கிரான் அதிகம் பரவக்கூடிய சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

தற்போதைய மாறுபாட்டிற்கு உட்பட்ட வைரஸால்   நோய்வாய்ப்பட்ட   ஒரு நபர் சராசரியாக 16 பேருக்கு நோயை பரப்புவதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.சீனாவிற்கான தற்போதைய மாறுபட்ட வைரஸ் தொற்றுநோயின் முந்தைய அலைகளை விட அதிகமாக உள்ளது.   கிறிஸ்துமஸ்  மற்றும்  புத்தாண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நாட்களாக மயானங்களில் இறந்தவர்களின் உடல்கள் வருவது அதிகரித்தபடியே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.   இறுதி சடங்கு செய்யும் சேவை நிறுவன பெண் ஊழியர் ஒருவர் கூறும் போது,  மீண்டும் கொரோனா பரவலுக்கு பிறகு எங்களது பணிச்சுமை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் பணியாற்றுகிறோம். தினமும் மயானத்துக்கு 200 உடல்கள் வருகின்றன. வழக்கமாக ஒரு நாளைக்கு 30 அல்லது 40 உடல்கள்தான் வரும்  என்றார்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் 60 சதவீதம் பேர் பாதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் தெரிவித்துள்ளார்.   கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  சீனாவில் அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். லட்சக்கணக்கானோர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவாலுவேஷன்   (Institute for Health Metrics and Evaluation)  கணிப்புகளின்படி, சீனாவில் கொரோனா பாதிப்பால் 2023ஆம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here