வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான், தெரெங்கானுவுக்கு சிலாங்கூர் RM1 மில்லியன் நன்கொடை அளிக்கிறது

கிழக்குக் கரையோர மாநிலங்கலான  கிளந்தான் மற்றும்  தெரெங்கானுவில்  ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய  சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிங்கிட் 1 மில்லியன் பண உதவி வழங்கவுள்ளது.  சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி, இரு மாநிலங்களும் தலா 500,000 ரிங்கிட் பெறும் என்று கூறினார், மேலும் மனிதாபிமான உதவியை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மற்றும் தெரெங்கானு மக்களுக்கு சிலாங்கூர் அனுதாபம் தெரிவிக்கிறது  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  வெள்ளம் மற்றும் பத்தாங் காலி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிலாங்கூர் மாநில அளவிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக அமிருதீன் மேலும் கூறினார்.

​​தெரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 26,494 பேருடன் ஒப்பிடும்போது    இன்று காலை 37,792 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எட்டு மாவட்டங்களில் உள்ள 310 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  கிளந்தனில்  இருந்து  நேற்றிரவு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை    14,359 பேருடன் ஒப்பிடுகையில், இன்று காலை 17,326 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 106 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், பத்தாங் காலி  நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 24 ஆக உள்ளது, மேலும் ஒன்பது பேர் இன்னும் காணவில்லை.  கடந்த வெள்ளிக்கிழமை காலை  ஆர்கானிக் பண்ணை முகாமில்   நிலச்சரிவு ஏற்பட்டபோது   அங்கு   இருந்ததாகக் கூறப்படும் 94 பேரில் 61 பேர் மீட்கப்பட்டனர் அதிகாரிகளின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு நன்றி  தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here