பத்தாங் காலி நிலச்சரிவு: கனமழை காரணமாக தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தம் – காவல்துறை

பத்தாங் காலி, கோஹ்டாங் ராயாவில் உள்ள The Father’s Organic Farm campsite பண்ணை முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், மீதமுள்ள மூன்று பேரைத் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுபியன் அப்துல்லா தெரிவித்தார்.

பிற்பகல் 3.25 மணிவரை மழை பெய்து கொண்டிருந்தது. அத்தோடு K9 பிரிவின் மோப்ப நாய்கள் தேடுதல் பகுதியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டதைக் காண முடிந்தது என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) அதிகாலை 2.42 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மொத்தம் 94 பேரில், 61 பேர் மீட்கப்பட்டனர், மேலும் மூன்று பேரை இன்னும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here