கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள LRT, MRT, மற்றும் மோனோரயில் நிலையங்களில் பழுதடைந்த எஸ்கலேட்டர்களுக்கான பழுதுபார்க்கும் பணிகள் பிப்ரவரி 2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக Rapid Rail நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட விநியோகத்தடை காரணமாக, குறித்த பழுதுபார்ப்பு பணிக்கு தேவையான உதிரிப்பாகங்கள் தாமதாமாக கிடைத்ததை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.
எதிர்காலத்தில் பழுதுபார்க்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க, இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக Rapid Rail நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தற்போது உதிரி பாகங்கள் கிடைப்பதால், அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) ஒப்பந்ததாரரால் உடனடியாக மாற்றும் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு, பிப்ரவரி 2023 இல் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.