மலேசிய ஆஸ்திரேலிய உறவுகளை மேம்படுத்தும் சமீபத்திய மூலோபாய கூட்டு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்  ஆஸ்திரேலிய பிரதமர்   Anthony Albanese ஆகியோர் விரிவான  (STRATEGY)   மூலோபாய கூட்டாண்மையின்    (CSP) கீழ் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளனர்.

நேற்று  Albanese  உடனான தொலைபேசி கலந்துரையாடலின் உள்ளடக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்று  தெரிவித்தார்.  பதவிக்கு வந்த பிறகு ஆஸ்திரேலிய பிரதமருடன் தான் தொடர்புகொள்வது இதுவே முதல் முறை என்று அன்வார் கூறினார்.

குறிப்பாக வர்த்தகம், முதலீடு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்.  மலேசியாவும் ஆஸ்திரேலியாவும் விரிவான மூலோபாய கூட்டாண்மை (CSP) மூலம் அதன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளன  என்று அன்வார் தனது   முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here