மலாக்கா மாநிலத்தில் 217 வாக்கு மையங்கள் நாளை திறக்கப்படும் – தேர்தல் ஆணையம்

மலாக்கா, நவம்பர் 19 :

மலாக்கா மாநிலத் தேர்தலில் (PRN) வாக்களிப்பதற்காக 1,109 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய மொத்தம் 217 வாக்கு மையங்கள் நாளை திறக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளைக்காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்றும் மொத்தம் 12,290 அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.

“நாளை 15வது மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 476,037 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்றும் மேலும் வாக்களிக்கச் செல்வதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதனை செயல்முறை மூலம் அவர்கள் உள்ளே செல்ல வேண்டும், மேலும் கை சுத்திகரிப்பு மற்றும் பதிவு வருகையைப் பயன்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான தூரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வாக்குச்சாவடியில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here