மானியங்களை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் தயாராகும் : ரஃபிஸி

தகுதியானவர்கள்    மானியங்களை   பெறுவதற்கான வழிமுறையை   அடுத்த ஆண்டு உருவாக்க முடியும் என்று பொருளாதார விவகார அமைச்சர் ரஃபிஸி ரம்லி நம்பிக்கை தெரிவித்தார்.  அத்தகைய மானியங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்பதைத் தீர்மானிக்க எந்த அமைப்பைப் பயன்படுத்தலாம் என்பது கேள்வியாக  உள்ளது  என்று ரஃபிஸி கூறினார்.

மக்களுக்கு மானியங்கள் மற்றும் நிதி உதவிகளுக்கான  இலக்கு நிர்ணயித்து  விநியோகம் செய்யும் வகையில் நெறிமுறையை  உருவாக்க வேண்டும் என்றார்.  ஒரு அதிநவீன குறியீட்டு அடிப்படையிலான இலக்கு   நிர்ணயித்து  மானிய முறையை  விரைவுபடுத்த வேண்டும்.  மக்களின்  வருமானம்  மற்றும் நுகர்வு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு  மானியங்களை  ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார்.  சில மாதங்களில் இது பற்றி  முடிவெடுக்க முடியும் என்றும்   விரைவில்  தேதி  வெளியிடப்படும்  என்றும்     நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஜனவரி 1, 2023 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான இரண்டாவது ஒழுங்குமுறை காலத்திற்கு (RP2) பயனர்கள் செலுத்த வேண்டிய எரிவாயு வசதிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை சராசரி கட்டணத்தை குறைக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக ரஃபிஸி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here