துன் மகாதீரின் தொலைநோக்கு திட்டம் கைவிடப்படுகிறதா?

2019 ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் தலைவராக இருந்தபோது துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால் தொடங்கப்பட்டு பகிரப்பட்ட செழிப்பு விஷன் 2030 (SPV 2030) திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அனைத்து அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பொதுச் சேவைகள் அலுவலகத்தின் (JPA) சுற்றறிக்கையானது, Wawasan Kemakmuran Bersama 2030 (Shared Prosperity Vision 2030) ஐ அதன் அனைத்து கடிதப் பரிமாற்றங்களிலும் பயன்படுத்துவதை கைவிடுமாறு அறிவுறுத்துகிறது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து அரசாங்க கடிதப் பரிமாற்றங்களிலும் இந்த சொற்றொடரைப் பயன்படுத்துவதை கைவிட பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

1979 முதல் பயன்பாட்டில் உள்ள Berkhidmat Untuk Negara (தேசத்திற்கான சேவை) மட்டுமே தக்கவைக்கப்படும்  என்று JPA சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இந்த சொற்றொடரை கடிதங்களில் பயன்படுத்துவதை கைவிடுகிறதா அல்லது SPV 2030 ஐ முழுவதுமாக கைவிடுகிறதா என்பது தெரியவில்லை. 2021 ஆம் ஆண்டு சுற்றறிக்கையில், முந்தைய சொற்றொடருடன் கூடுதலாக SPV 2030 சொற்றொடரைச் சேர்க்குமாறு JPA அறிவுறுத்தியது.

SPVக்கான வரைபடம் அதிகாரப்பூர்வமாக 2020 இல் வெளியிடப்பட்டது. இது நிலையான வளர்ச்சியை அடைய 2021 முதல் 10 ஆண்டு கால திட்டமாகும். இது அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், தேசத்தின் செழிப்பை மேம்படுத்தவும், இன மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை தேசத்தின் அடித்தளமாகக் கொண்டாடும் அதே வேளையில், மக்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்யவும் இருந்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here