சிலாங்கூரில் மோட்டார் சைக்கிள் மீது மரம் விழுந்து விபத்து! 26 வயது இளைஞர் பலி!

பெட்டாலிங் ஜெயா,

சிலாங்கூர் மாநிலத்தின் சிலாயாங் பகுதியில் இன்று பிற்பகல் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய புயலின்போது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

சிலாயாங்கில் உள்ள செத்தியா ஈக்கோ டெம்ப்ளர் (Setia Eco Templer) பகுதியின் ஜாலான் செட் 2/8 சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து லோரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில், மோட்டார் சைக்கிளோட்டி மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.

இதுகுறித்து பிற்பகல் 2.20 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர் மரத்தின் அடியில் சிக்கியிருந்த இளைஞரை மீட்டனர்.

எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, சாலையின் ஒரு பகுதியை மறித்திருந்த மரம் அகற்றப்பட்டு, பிற்பகல் 3.20 மணியளவில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here