கோலாலம்பூர்:
பொதுப் போக்குவரத்தின்போது முகக்கவசம் அணிவது தற்போதைக்கு கட்டாயமில்லை, இருப்பினும் நாட்டில் தற்போது கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து , பொதுப் போக்குவரத்தின்போது முகக்கவசம் அணிவது ஊக்குவிக்கப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் கூறினார்.
“முகக்கவசத்தின் பயன்பாடு தொடர்பான எந்தவொரு கொள்கைகளும் விதிகளும் சுகாதார அமைச்சகத்தால் (MOH) மட்டுமே நிறுவப்படும். போக்குவரத்து அமைச்சகம் எங்கள் சொந்தக் கொள்கையை குறித்த விஷயமம தொடர்பில் அமைக்காது.
“இதுவரை, பொது போக்குவரத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனாக் நாங்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கிறோம். இது பொதுமக்களின் பொறுப்பாகும், ”என்று அவர் இன்று சீனா- மலேசியா இடையிலான புதிய அனைத்துலக நில-கடல் வர்த்தக பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான மாநாட்டை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாவில் சமீபத்தில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்ற கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று நேற்று, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.









