5 நாட்களாக பனிப்புயலில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா ; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயலால் மக்களின் இயல்புவாழக்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டு இருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலோ முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு நியூயார்க்கின் சில பகுதிகள் 43 அங்குல பனியால் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கியுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு 64கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சாலைகளில் பனி கட்டிகள் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 48 மாகாணங்களில் 4 முதல் 6 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் குவிந்து கிடப்பதால் மைனஸ் டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உறையவைத்துள்ளது.

இந்நிலையில், 5 நாட்களாக கடுமையாக வாட்டி வந்த பனிப்பொழிவும், பனி புயலும் படிப்படியாக குறையுமென்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here