“நாம் இழந்தவற்றை சிந்தித்துக்கொண்டிருக்காமல், நமக்குள்ளே இருக்கும் அமைதியைக் காணத் தொடங்கினால், நமக்குள் புதியதோர் உலகம் பிறக்கும்.”
நாம் சுமைகளை இறக்கி விட்டு நமக்கு அவசியமானவைகளை மட்டும் சேகரிக்க தொடங்கினால் எப்படி இருக்கும்?
நாம் ஏற்கனவே சுமந்து வந்திருக்கிற வலியையும் குழப்பத்தையும் விட்டுவிட்டு, உண்மையாகவே தேவைப்படுவதை மட்டும் சேகரிக்க தொடங்கினால், வாழ்க்கை எளிமையாகவும் இனிமையாகவும் மாறும். ஒவ்வொரு மூச்சும் அர்த்தமுள்ளது என்பதை உணர்ந்தால், ஒவ்வொரு கணமும் அன்பளிப்பாகிவிடும். ஆகவே, நம்மிடம் உள்ளதைக் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்முள்ளே குடி கொண்டிருக்கும் அமைதியை, ஆனந்தத்தை, ஏகாந்தத்தை நம்மால் உணர முடியும். உயிர் வாழ்வது வெறும் வாழ்க்கையாக அல்லாமல் உயிரோடு இருப்பதை உணர்ந்து வாழ ஆரம்பித்தால் இவ்வுலகில் வாழ்வது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். அந்த விழிப்புணர்வு நமக்குள் வரும்போது வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும். அதோடு, ஒவ்வொரு தருணத்தையும் விழிப்புணர்வுடன் அணுகும்போது வாழ்க்கை ஒரு சாதாரண நடைமுறையாக அல்லாமல், சாத்தியங்கள் நிறைந்த திருவிழாவாக மாறும். உண்மையான மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை – அது நம் உள்ளத்தில் நிகழும் ஒரு மென்மையான அதிர்வாகும். அந்த அதிர்வை கவனிக்கத் தொடங்கும் தருணம் உயிர் வாழ்வு ஓர் உன்னதமான பொக்கிஷம் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்குவோம்.
கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள் வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:




















