இந்தியப் பிரதமரின் தாயாரின் மறைவுக்கு அன்வார் இரங்கல்

இந்திய பிரதமர் மோடியின் தாயார்

புதுடெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட பல தலைவர்கள் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தனர்.

மலேசியப் பிரதமர் அவரது மற்றும் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலின் சார்பாக ஒரு இரங்கல் செய்தியை ட்வீட் செய்தார்.

உங்கள் அன்பிற்குரிய தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடியின் இழப்பிற்காக, இந்தியப் பிரதமர், மாண்புமிகு @நரேந்திர மோடிக்கு, அசிஸாவும் நானும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்க விரும்புகிறோம். உங்கள் சோகத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் துக்கத்தின் போது எங்கள் எண்ணங்கள் உங்களுடன் இருக்கும் என்று அன்வர் கூறினார்.

இந்திய தலைவரின் தாயார் தனது 99வது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

மாநில தலைநகர் காந்திநகரில் அவரது இறுதிச் சடங்குகளில் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

மோடியின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மற்ற வெளிநாட்டு தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் உள்ளனர்.

தாயை இழப்பதை விட பெரிய இழப்பு எதுவும் இல்லை. அவரது தாயாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஷேபாஸ் ட்வீட் செய்துள்ளார்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் ஹீராபெனின் மறைவு குறித்து அறிந்து “ஆழ்ந்த வருத்தம்” அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த துயரமான நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விக்ரமசிங்கே கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here