அதிமுகவில் இருந்து சி. விஜயபாஸ்கர் விலகல்

சென்னை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதம் ஒன்றை வழங்கினார்.

கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், சி. விஜயபாஸ்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர், அ.தி.மு.க.வில் இருந்து பதவி விலகிய 5-வது எம்.எல்.ஏ. ஆவார். இதனால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 47-ல் இருந்து 42 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் , அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் இயக்கம் வேதனை, சோதனைகளை எதிர்கொண்டுள்ளது .மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி என் பயணத்தை அங்கு தொடர்வது சரியாக இருக்காது .நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு நன்றி, வணக்கத்தை தெரிவித்து மனவலியோடு விலகுகிறேன்.நான் விலகுவது ஒரு கட்சியில் இருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து

வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்தோடு இயக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன் . என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும். என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here