இன்ஸ்டாகிராமின் வழி புகழ் பெற்ற மலேசிய உணவகங்கள்

உணவகம் என்பது அதன் சுவையான உணவுக்காக மட்டும் புகழ் பெறுவதில்லை. மாறாக,  அந்த உணவகம் அமைந்திருக்கும் சூழல், அதன் வித்தியாசமான கட்டட வடிவமைப்பு, அங்கு வழங்கப்படும் சேவை, நியாயமான விலை போன்ற காரணங்களுக்காகவும் உணவகங்கள் பிரபலமடைகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் எனும் சமூக ஊடகத்தின்வழி பிரபலமான சில உணவகங்களைப் பார்ப்போம்.

1. நோர்ம் உணவகம், ஜோர்ஜ் டவுன் பினாங்கு

Norm
260C, Lebuh Carnarvon
Georgre Town, Penang.
Business Hours: 10AM- 12AM (Opens Daily)
Tel Number:+6017 -4011300
Email: norm@orgeto.com

பினாங்கு தலைநகரம் ஜோர்ஜ் டவுனில், லெபோ கர்னார்வோன் என்ற சாலையில் ஒரு மூலையில் அமைந்திருக்கும் அமைதியான உணவகம் நோர்ம். அங்கு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட காப்பி, தேநீர், சுவை பானங்கள் ஆகியவற்றுடன் அந்த உணவகத்திற்கே உரிய பிரத்தியேக சிற்றுண்டிகளும் கேக் வகைகளும் பரிமாறப்படுகின்றன. ஓய்வாக இருக்கும் நேரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து அளவளாவுவதற்கு பொருத்தமானது இந்த உணவகம். அதிக அளவில் ஆர்ப்பாட்டம் இல்லாத வடிவமைப்புகளுடன் மூங்கிலால் ஆன நாற்காலி, மேசைகளுடன் அமைந்திருக்கிறது. தாவரங்கள், அலங்காரங்களுடன் இந்த உணவகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையான சூரிய வெளிச்சத்தையும் இந்த உணவகம் கொண்டிருக்கிறது.

2. பெர்ப்ஸ் & கீகல்ஸ், ஈப்போ, பேராக்

Burps & Giggies
93-95, Jalan Sultan Yusof
30000 Ipoh, Perak.
Business Hours:
09.00AM – 05.00 PM (Weekdays)
09.00AM – 09.00 PM (Weekends)
Tel Number: +605 – 2461306
Email: bng.ipoh@gmail.com

 இன்ஸ்டாகிராமில் பிரபலமாவதற்குரிய அனைத்து அம்சங்களையும்  கொண்டது இந்த உணவகம். அதன்படி குறுகிய காலத்தில் இன்ஸ்டாகிராமில் பிரபலமானது. பிரிட்டிஷ் காலத்தின் ஆட்சியின்போது கட்டப்பட்ட இரட்டைக் கடை வீட்டில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. இதன் சுவர்களில் கண்ணைப் பறிக்கும்  பெரிய அளவிலான ஓவியக் காட்சிகள் வரையப்பட்டிருக்கின்றன. 80ஆம் ஆண்டுகளுக்கு நம்மைப் பின்னோக்கிக் கொண்டு செல்லும் வண்ணம் இதன் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்கால பாணி அரங்க அமைப்புடன் இதன் சூழல் அமைந்திருக்கிறது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஜெலாட்டோ ரக சிற்றுண்டிகள், குலா மலாக்கா வாழைப் பழங்களின் சுவையோடு பரிமாறப்படுகின்றன. செம்படாக் பழவகைகள், ஜெலாட்டோ சென்டோல், லோங்கான் பழவகை பானங்கள் ஆகியவையும் இந்த உணவகத்தில் பிரபலம். ஈப்போ சென்றால் நீங்கள் தவறாமல் செல்ல வேண்டிய உணவகம் இது.

3. ஈட் எட் 18, மலாக்கா

Eat At 18
18,Jalan Hang Leiku,
75200 Melaka
Business Hours:
08.30AM – 06.00 PM (Closed every Tuesday)
Tel Number: m.me/eatat18
Messenger: m.me/eatat18

 மலாக்கா நகரின் ஹங் லெக்கியூ தெருவில்  உட்புறமாக அமைந்திருக்கும் அழகிய உணவகம் இது. இதன் தோற்றப் பொலிவை பார்த்ததுமே உங்களுக்கு இங்கு தம்படம் (செல்பி) எடுக்கத் தோன்றும். இந்த உணவகத்தின் உள்ளே அழகிய ஓவியங்கள், நூல்கள் நிறைய அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. கூரைகளில் தொங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரம்மாண்ட விளக்குகள் இந்த உணவகத்தின் இன்னொரு சிறப்பம்சம். பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறு பானங்களுக்காக இந்த உணவகம் புகழ் பெற்றது. மங்குஸ்தீன், டுரியான், டிரெகன், ஸ்டார்புரூட் போன்ற பழவகைகளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் இங்கு பிரபலம்.

4. பொக்கோக் கேஎல் கஃபே, கோலாலம்பூர்

Pokok KL Café
MAHSA Avenue,Block B,
Jalan Elmu off Jalan Universiti,
59100 Kuala Lumpur
Business Hours:
09.30AM – 09.00 PM (Open Daily)
Tel Number:+063-8408 1811
Email:hello@brickhouse.my

மாசா பல்கலைக்கழகத்தில்  படித்தவராக நீங்கள் இருந்தால் அதிர்ஷ்டக்காரர். அந்தப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் அமைந்திருக்கிறது இந்த உணவகம். திறந்தவெளி அமைப்புடன் இயற்கை சூழலில் அமைந்திருப்பதால் பிரபலமானது இந்த உணவகம். இந்த உணவகத்தைச் சுற்றி பெரியளவிலான கண்ணாடி தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பசுமையான வெளிப்புற காட்சிகளை இயற்கையான வெளிச்சத்தில் நீங்கள் கண்டு களிக்கலாம். அதற்கேற்ற உணவும் அமைந்து விட்டால் அந்த அனுபவமே தனி சுகம்தான். அதிகளவில் பிரபலாகி இருப்பதால் சில சமயங்களில் இட நெருக்கடி இங்கே ஏற்படும். உள்ளே நுழைவதற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் கண்ணைக் கவரும் உட்புறத் தோற்றமும் பரிமாறப்படும் உணவுகளின் அழகும் காத்திருப்பு நேரத்தை நியாயப்படுத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here