கோலா திரெங்கானு:
திரெங்கானுவில் வெள்ளநிலைமை முழுமையாக சீரடைந்ததைத் தொடர்ந்து, இன்று அங்கு மூன்றாம் தவணைக்கான பள்ளியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பிக்கப்பட்டன.
பள்ளி நிர்வாகம், உள்ளூர் சமூகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்போடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் துப்புரவுப் பணிகள் விரைவாகவும் சிறப்பாகவும் நடைபெற்றதாக மாநில கல்வித் துறை இயக்குநர் அப்துல் முய் நகா தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மொத்தம் 17 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 5,386 மாணவர்கள் இருப்பதாகவும், ஆனால் மாவட்ட கல்வி அலுவலகங்களின் தகவல்களின்படி, அனைத்து மாணவர்களும் இன்று பள்ளிக்கு வருகை தந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது,” என்று அவர் இங்குள்ள செக்கோலா கெபாங்சான் பூலாவ் ருசாவிற்கு விஜயம் செய்த பின்னர், கூறினார்
மேசைகள், நாற்காலிகள் எனப் பல விஷயங்கள் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தாலும், கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மாநிலக் கல்வித் துறையால் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடிந்தது என்றும் அப்துல் முய் கூறினார்.