‘மலேசியர்களுக்கு 2023க்கான ஏழு நற்செய்திகள்’ என்ற காணொளி போலியானது – பகிரவேண்டாம் என்கிறார் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்

கோலாலம்பூர்:

“2023-ஆம் ஆண்டு மலேசியர்களுக்கான 7 நற்செய்திகள்” என்ற தலைப்பில் டிக் டாக் சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டு வரும் காணொளி போலியானது என்றும் அதை மக்கள் பகிர வேண்டாம் என்றும் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இந்தக் காணொளி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, தாம் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமும், டிக் டாக் நிறுவனத்திடமும் புகார் செய்ததாக அவர் மேலும் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பகிரப்பட்ட அந்த போலி காணொளியை 18 லட்சம் டிக் டாக் பயனீட்டாளர்கள் பார்த்திருப்பதாகவும், இன்னும் சிலர் அதனை பதிவிறக்கம் செய்து, இதர சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்ததாக அவர் மேலும் கூறினார்.

ஒரு செய்தி அல்லது காணொளியை பகிர்வதற்கு முன்னர், அதன் உண்மைத் தன்மையை சரி பார்க்குமாறு பொதுமக்களை ஃபாமி ஃபட்சில் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here