கிளந்தானில் இரு ஆறுகளின் நீர் மட்டம் ஆபத்தான அளவில் பதிவு

கோத்தா பாரு:

நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, கிளந்தான் பகுதியில் உள்ள இரண்டு ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன.

கோத்தா பாருவில் உள்ள கிளந்தான் ஆறு மற்றும் தும்பாட்டில் உள்ள கோலோக் ஆறு ஆகியவை அவையாகும்.

மாலை 6.45 மணி நிலவரப்படி, கிளந்தான் ஆற்றின் அளவு 1.87 மீட்டராக இருந்தது, இது அதன் அபாய நீர் மட்டமான 1.85 மீட்டருக்கு மேல் 0.02 மீட்டர் அதிகமாக பதிவாகியது.

தும்பாட்டில் உள்ள கோலோக் ஆற்றின் நீர் மட்டம் 3.16 மீட்டர் அளவில் பதிவாகியுள்ளது, இது அதன் அபாய அளவான 2.50 மீட்டரைத் தாண்டி 0.66 மீட்டர் அதிகமாக பதிவாகியுள்ளத்து.

ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள மற்ற கோலோக் ஆறானதி 8.75 மீ உயரத்தில் பதிவாகியுள்ளது, இது அதன் எச்சரிக்கை அளவான 8 மீ உயரத்தை விட 0.75 மீ அதிகமாக உள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதாவது, இரண்டு மாவட்டங்களில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் தற்போது 699 பேர் தஞ்சமடைந்துள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here