பினாங்கில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐவர் கைது

ஜார்ஜ் டவுன்:

பினாங்கில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக, பினாங்கு காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் சுஹைலி முகமட் ஜெய்ன் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பரில் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜாலான் பேதிக் என்ற இடத்தில் உள்ள ஒரு பல சரக்குக் கடையில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 26 முதல் 30 வயதுடைய இரு உள்ளூர் ஆண்களை (முதல் தொகுதி) போலீசார் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து a .38 ரிவால்வர் கைத்துப்பாக்கி, இரண்டு தோட்டா உறைகள் மற்றும் மூன்று தோட்டாக்கள், இரண்டு Yamaha 135z மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு SYM மோட்டார் சைக்கிள், ஒரு கார், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், ஒரு கத்தி, நான்கு ஹெல்மெட்கள் மற்றும் இரண்டு ஸ்லிங் பைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததாக, புக்கிட் மெர்தாஜாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) நடந்த ஓர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறினார்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களின் கைது மூலம், மத்திய செபெராங் பிறை மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆறு ஆயுதம் எந்றகிய கொள்ளை வழக்குகளைத் தீர்த்துவிட்டதாக அவர் கூறினார்.

குறித்த இருவரும் ஆறு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயுதச் சட்டம் 1960 இன் பிரிவு 3(1) மற்றும் பிரிவு 8 அத்துடன் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

சந்தேக நபர்களின் இரண்டாவது தொகுதி சந்தேக நபர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 25 அன்று மாலை 6 மணியளவில், கேப்பாலா பாத்தாஸில் கைது செய்யப்பட்டனர்.

24 மற்றும் 25 வயதுடைய இருவரின் கைது மூலம் வடக்கு செபெராங் பிறையில் மூன்று கொள்ளைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகளை தீர்க்க முடிந்தது என்றும் அவ்விருவரும் ஜனவரி 4ம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மூன்றாவது சந்தேக நபர் கடந்தாண்டு டிசம்பர் 30 அன்று கைது செய்யப்பட்டதாகவும், 30 வயதான அந்த ஆடவரை கைது செய்ததன் மூலம் ஒரு பெண்ணிற்கு மாயத்தை ஏற்படுத்தி, அவரிடமிருந்து RM350 கொள்ளையடித்த வழக்கை தீர்க்க முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.

விசாரணையின் அடிப்படையில், அவர் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டிலும் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அவர் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here