காரிலிருந்த பொருள் வெடித்து சமையல்காரர் மரணமடைந்தது தொடர்பில் தம்பதியினர் கைது

கோலாலம்பூர்:

கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் தேதி, அம்பாங் ஜெயாவின் பாண்டன் இன்டாவில் காரிலிருந்த பொருள் வெடித்ததில் ஒரு சமையல்காரர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், திருமணமான ஒரு தம்பதியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

நேற்றிரவு கெடாவின் செர்டாங்கில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் தற்போது அம்பாங் ஜெயா மாவட்ட காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட்தாகவும், அம்மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முஹமட் பாரூக் எஷாக் கூறினார்.

“இச்சம்பவத்தின் நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் கொலைக்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here