ஜனவரி 9 முதல் லங்காவி-கோலக் கெடா படகு சேவை இரவு 7 மணி வரை இயங்கும்

அலோர் ஸ்டார்:

லங்காவி மற்றும் கோலக் கெடா இடையேயான படகு சேவைகள் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 9) முதல் காலை 7 மணி மற்றும் 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று லங்காவி ஃபெரி லைன் வென்ச்சர்ஸ் Sdn Bhd குழுமத்தின், மனித வளங்கள் மற்றும் செயல்பாட்டு மேலாளர் கேப்டன் டாக்டர் பஹாரின் பஹாரோம் தெரிவித்தார்.

லங்காவியில் இருந்து கோலக் கெடாவிற்கு படகு சேவைகள் காலை 7.30 மணி, 10.00 மணி, நண்பகல் 1 மணி , 4 மணி மற்றும் 7 மணிக்கு இருக்கும் என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் கூறினார்.

எவ்வாறாயினும், கடல் மட்டம் ஒரு மீட்டருக்கு கீழே குறைந்தால் படகு சேவை அட்டவணையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் பொது விடுமுறை நாட்களில் இரண்டு வழித்தடங்களுக்கும் கூடுதலான எண்ணிக்கையிலான படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here